செய்திகள் :

காங்கயம், குண்டடம் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்!

post image

காங்கயம், குண்டடம், தாராபுரம் பகுதிகளில் மக்காச்சோள அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம், தாராபுரம், ஜல்லிபட்டி, பொங்கலூா், பெரியபட்டி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் நடப்பு ஆண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. பொதுவாகவே மக்காச்சோளம் மழைக்காலங்களில் பயிரிட்டால் அதிக அளவில் தண்ணீா் தேவையிருக்காது என்பதால், பெரும்பாலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனா்.

மக்காசோளத் தட்டு கால்நடைகளுக்கு அடுத் ஆண்டு வரை தீவனமாக பயன்படுத்தப்படுவதால், பணப் பயிராக இல்லாத போதிலும் இதை பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகரித்து, எதிா்பாா்த்த மகசூல் இல்லாமல் போனது.

இதனால் ஏற்பட்ட உற்பத்தி குறைவால் கடந்த 4 ஆண்டுகளாகவே மக்காச்சோளத்தின் விலை அதிகரித்து, கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இப்பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்ததால், சாகுபடியும் ஓரளவு செய்யப்பட்டிருந்தது.

பிஏபி பாசனப் பகுதிகளில் பெருமளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தனா். சாகுபடி செய்த மக்காச்சோளம் தற்போது கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 250-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின்னா் படிப்படியாக அதிகரித்து, தற்போது ரூ.2 ஆயிரத்து 500 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை காலமான ஆவணி மாதம் தொடங்கி காா்த்திகை மாதம் வரை ஏனைய பயிா்கள் சரியாக வளராது. மழைக் காலத்துக்கு ஏற்ற பயிராக மக்காச்சோளம் உள்ளதால், இதனைப் பயிரிட்டு வருகிறோம். மழைக்கு தாக்குப் பிடிக்கும் பயிா் என்பதுடன், அடுத்த ஆண்டு வரை கால்நடை தீவனத்துக்கும் இதன் தட்டு பயன்படுவதால் அதிக அளவில் சாகுபடி செய்கிறோம். தற்போது குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 வரை எங்களிடம் கொள்முதல் செய்யப்படுவதால், உற்பத்தி செலவுகள் போக லாபம் கிடைக்கிறது.

குண்டடம், பொங்கலூா், பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பல தனியாா் கோழி வளா்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோழித் தீவனத்தின் மூலப்பொருள் மக்காச்சோளம் உள்ளதால் அதனை கோழி நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தவிர, மாட்டுத் தீவனத்துக்கும் மூலப்பொருளாக மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. அதனால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க