பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்: கமல்ஹாசன்
காங்கிரஸை கண்டித்து பாஜக இன்று போராட்டம்
பெங்களூரு : பெலகாவியில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டுவிழாவுக்கு மக்கள் பணம் செலவழிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
1924ஆம் ஆண்டு டிச.26,27ஆம் தேதிகளில் பெலகாவியில் 39ஆவது காங்கிரஸ் மாநாடு மகாத்மாகாந்தி தலைமையில் நடைபெற்றது. அதன் நூற்றாண்டுவிழாவை பெலகாவியில் வியாழக்கிழமை காங்கிரஸ் தொடக்கியுள்ளது. இந்தவிழாவுக்கு காங்கிரஸ் அரசு மக்கள் வரிப்பணத்தை செலவழிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை(டிச.27) போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கூறியது: பெலகாவியில் காங்கிரஸ் மாநாட்டு நூற்றாண்டு விழாவை மக்கள் வரிப்பணத்தில் மாநில அரசு கொண்டாடி வருகிறது. இது சரியல்ல. இதை கண்டித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மகாத்மாகாந்தி சிலை முன்பு தா்னா போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. போலி காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் விழாவை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கலந்துகொள்வாா்கள். மகாத்மாகாந்தி மற்றும் டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கரின் கொள்கைகளை காங்கிரஸ் கைவிட்டுள்ளது என்றாா் அவா்.