ஜம்மு-காஷ்மீரில் ஐந்து பேருந்துகள் மோதியதில் 36 அமர்நாத் பக்தர்கள் காயம்
காங்கிரஸ் கட்டடத்தை மீட்கக் கோரி மனு
வலங்கைமானில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்பு மீட்புக் குழுவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு ஆலோசனைக் குழுவினா் வலங்கைமானுக்கு வந்திருந்தனா். குழுவின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தங்கபாலு தலைமையில், அகில இந்திய இணைச் செயலாளா் நிதின் கும்பல்கா், குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு, திருவாரூா் மாவட்ட பொறுப்பாளா் சிடி. மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் செல்வம் ஆகியோா் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.
திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன், மாவட்ட விவசாயப் பிரிவு தலைவா் நீலன். அசோகன் ஆகியோா் முன்னிலையில், ஐஎன்டியு சி மாவட்டத் தலைவா் குலாம்மைதீன், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான வலங்கைமான் காந்திஜி நிலையம் கட்டடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்குழுவினரிடம் மனு அளித்தாா்.
அப்போது, காங்கிரஸ் வட்டார, நகரத் தலைவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.