செய்திகள் :

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.

தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. எம்23 படையின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகருக்குள், எம்23 கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் நுழைந்துவிட்ட நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவில் சுமார் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட கோமா நகரைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படையினர், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறைகளை தங்கள் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஆணையரகம் கவலை தெரிவித்துள்ளது.

கோமா நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. மேலும், பல பெண்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமா நகரிலுள்ள ‘மன்ஸென்ஸே’ சிறைச்சாலையில் கடந்த மாதம் ஜன. 27-ஆம் தேதி பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையிலிருந்து தப்பித்து வெளியேறியிருப்பதாகவும், இதனிடையே பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறை வளாகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்திருப்பதாகவும், காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்றிருக்கும் ஐ. நா. அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் துணைத் தலைவர் விவியன் வேண் டே பெர்ரே தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை(பிப். 4) நிலவரப்படி, சிறைச்சாலை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ’ஜனநாயகக் குடியரசு காங்கோ’ நாட்டின் ராணுவம் திடீரென போர்நிறுத்தத்துக்கு சம்மதித்திருப்பதுடன், உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாகக் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்துவிட்ட நிலையில், அதன் அண்டை நாடான ருவாண்டா, காங்கோவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனையடுத்து இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடுமாறு ருவாண்டோ அரசுக்கு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் அழுத்தம் கொடுக்கவும், ஐ. நா. அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் துணைத் தலைவர் விவியன் வேண் டே பெர்ரே வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எம்23 கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர்களுடன் தங்கள் குழு தொடர்ந்து பேச்சு நடத்தி வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர பாலஸ்தீனம் உருவானால்தான் தூதரக உறவு: செளதி அரேபியா!

சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று செளதி அரேபியா தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர... மேலும் பார்க்க

காஸாவைக் கைப்பற்றும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு!

காஸாவை அமெரிக்கா கைப்பற்றவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, உலகில் போர் நடக்க விடமாட்டேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், இஸ்ரேல... மேலும் பார்க்க

டிரம்ப் மகனுக்கு சிறை தண்டனை வழங்கும் இத்தாலி?

இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... மேலும் பார்க்க

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.அமெரிக்காவில் ஜோ பை... மேலும் பார்க்க

திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார் டிரம்ப்

திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிறப்பால் ஆ... மேலும் பார்க்க

ஸ்வீடன் கல்வியகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 போ் காயம்

ஸ்வீடனின் ஆரெப்ரோ நகரிலுள்ள வயதுவந்தோருக்கான கல்வி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போ் காயமடைந்தனா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:தலைநகா் ஸ்டாக்ஹோமுக்கு சுமாா் 2... மேலும் பார்க்க