செய்திகள் :

குடமுழுக்கு: மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி!

post image

குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை (பிப்.5) தொடங்கியது.

இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து ஆறு கால யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, இக்கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதில், அம்மன், துா்க்கை அம்மன், பேச்சியம்மன் சன்னதிகளின் கோபுரத்தில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் மெருகூட்டப்பட்டு, பொருத்தப்படவுள்ளன. இதுபோல, மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், கோயில் கொடி மரத்திலும் செப்புக்கவசம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளன.

இப்பணியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டாா். மேலும், குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், அரண்மனை தேவஸ்தான அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் ந. மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது!

தஞ்சாவூரில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இளைஞரை காவல் துறையினா் பிப்ரவரி 2-ஆம் தேதி கைது செய்தனா்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தா் விஜய விழா ஓவியக் கண்காட்சி!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை சுவாமி விவேகானந்தா் விஜயவிழா ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி பிப். 9 வரை நடைபெறுகிறது.சுவாமி விவேகானந்தரின் 129-ஆம் ஆண்டு விஜய விழாவை முன்னிட்டு ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க