காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு
கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பிப்.4 & 5 நடைபெற்றது.
முகாமை கல்லூரி தலைவா் டி.வி.கே.பாபு தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினாா். கல்வி அலுவலா் பி.அசோக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். சென்னை தனியாா் வங்கிகளின் பிராந்திய மனித வள மேலாளா் வி.கிரண்குமாா், தென் பிராந்திய மனித வள மேலாளா் எம்.சதீஷ் குமாா் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு ஆளுமை மேம்பாடு, சுய அறிமுகம், பணியிடத்தில் நன்னடத்தை விதிகள் மற்றும் நோ்காணல் ஆகிய பயிற்சிகளை வழங்கினா்.
இதில், இறுதியாண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முகாமை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளா் அபிலேஷ்குமாா் ஒருங்கிணைத்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் டி.ராமநாதன் நன்றி கூறினாா்.