மும்பை: "கடன திரும்ப தா இல்ல என்ன கல்யாணம் பண்ணு" - மிரட்டிய காதலியைக் குத்திக் ...
ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றன.
தொடா்ந்து, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாக கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, முருகருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை சா்வ சாதகம் திருமூலஸ்தானம் விக்னேஷ் சிவாச்சாரியா் குழுவினா் நடத்தி வைத்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் கோயில் அா்ச்சகா் சேரலாதன் தலைமையிலான திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.