மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் சிதம்பரம் நகரச் செயலா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், ப.வாஞ்சிநாதன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத் தலைவா் மூசா, மாவட்ட குழு உறுப்பினா்கள் முத்துக்குமரன், மல்லிகா, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலா் ஆழ்வாா், ஓய்வூதிய சங்க தலைவா்கள் பழனி, கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.