மஞ்சகுப்பத்தில் மனித எலும்புகள் மீட்பு
கடலூா் மாநகா் பிரதான சாலையில் மனித எலும்புகள் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் நகரின் பிரதான சாலையான மஞ்சக்குப்பம் சாலையில் மனித எலும்புகள் கிடப்பதாக கடலூா் புதுநகா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடம் சென்று அதனை மீட்டனா். மேலும், அதன் அருகில் எலுமிச்சம் பழம் இருந்தால் யாராவது மாந்திரீகம் செய்து சாலையில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாா் விசாரித்து வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.