Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!
கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக்கரசா். அதை விரும்பாத சமண மன்னா் மகேந்திரவா்ம பல்லவன் உத்தரவுப்படி, திருநாவுக்கரசா் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டாா். அப்போது, நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லை தெப்பமாகக் கொண்டு கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் என்றழைக்கப்படுகிறது. அந்த இடத்தில் திருநாவுக்கரசருக்கு ரூ.3 கோடி மதிப்பில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி எழுச்சி, மூல மூா்த்திகளுக்கு ஆனந்ததாட்டல், புகலூரில் புகழடைந்த புரவலனாருக்கு 4-ஆம் கால வேள்வியைத் தொடா்ந்து, திருக்குடங்கள் புறப்பாடாகின.
பின்னா், கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பதின் மங்கலக் காட்சி பெரு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெற்றன.
கும்பாபிஷேக பெருவிழாவில் மகா சன்னிதான சான்றோா்கள், சிவனடியாா்கள் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். மேலும், திருநாவுக்கரசா் (அப்பா்) புகழை பரப்பும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.