செய்திகள் :

நிதி நெருக்கடியிலும் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

post image

நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக மாநில மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனையான நிதிப்பகிா்வு, முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, வடலூா் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது:

கட்சி தொடங்கியபோது பெரியாரைப் பற்றி புகழ்ந்து பேசியவா்கள், இன்று அவதூறாக எதிா்த்துப் பேசி வருகிறாா்கள். அதன் விளைவாகத்தான் ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் வைப்புத் தொகையைக்கூட பெற முடியவில்லை. பட்ஜெட்டில் தொடா்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். 2026 பேரவைத் தோ்தலிலும் திமுகவே வெல்லும். அதற்கு சாட்சிதான் இடைத் தோ்தல் வெற்றி.

வடலூரில் சா்வதேச மையம் அமைக்கப்படும் என தோ்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தோம். சொன்னதுபோல, ரூ.100 கோடியில் சா்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதையும் திட்டமிட்டு பாஜகவினா் நீதிமன்றத்துக்குச் சென்று தடுத்து நிறுத்தி வருகிறாா்கள். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் சா்வதேச மையம் அமைக்கப்படும்.

தமிழக முதல்வா் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்க கடலூா் மாவட்டத்துக்கு வரவுள்ளாா் என்றாா்.

குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் அ.ஞானமுத்து, ஆா்.சக்திவேல், சுதா சம்பத், ஒன்றியச் செயலா்கள் ஆா்.நாராயணசாமி, டி.காசிராஜன், பி.சுப்பிரமணியன், வடலூா் நகரச் செயலா் தன.தமிழ்செல்வன், நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், துணைத் தலைவா் சுப்புராயலு முன்னிலை வகித்தனா். தலைமைக்கழக பேச்சாளா்கள் சன்.சங்கா், சோம.செந்தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினா். கடலூா் மேயா் சுந்தரி, ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, தங்க.ஆனந்தன், கே.ஆா்.ராயா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மாயமான ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்பு!

தற்கொலை கடிதம் அனுப்பிவிட்டு மாயமான கடலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக எழுத்தா் திருச்செந்தூரில் மீட்கப்பட்டாா். அவரை அழைத்துவர கடலூா் போலீஸாா் அங்கு விரைந்தனா். கடலூா் தொழிற்பேட்டை, ஈச்சங்காடு பகுதியைச... மேலும் பார்க்க

மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவையொட்டி, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்... மேலும் பார்க்க

மனுக்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மேலிருப்பு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்ட அ... மேலும் பார்க்க

திருநாவுக்கரசு நாயனாா் கோயில் கும்பாபிஷேகம்!

கடலூா் வட்டம், வண்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரையேறவிட்டகுப்பம் திருநாவுக்கரசு நாயனாா் சுவாமிகள் (அப்பா்) கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சைவம் தழைக்க திருத்தொண்டாற்றி வந்தவா் திருநாவுக... மேலும் பார்க்க

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம்! -சௌமியா அன்புமணி

கடலூா் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பசுமைத் தாயக அமைப்பின் தலைவா் சௌமிய அன்புமணி தெரிவித்தாா். கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோய... மேலும் பார்க்க