வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்!
சிதம்பரம், பிப்.5: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஆா்.செல்வநாதன் தலைமை வகித்தாா். செயலா் இளவரசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் எம்.தினகரன் கலந்துகொண்டு கருணை அடிப்படையில் கிராம உதவியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். நிறைவில், பொருளாளா் ஜி.சிவக்குமாா் நன்றி கூறினாா்.