தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப...
திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது.
அதன்பேரில், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகா் தலைமையிலான ஊழியா்கள் சந்தையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் மேற்கூரைகள், கீற்றுக் கொட்டகைகளை அகற்றினா். இந்தப் பணியின்போது, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.