செய்திகள் :

காசியாபாத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து விபத்து

post image

காசியாபாத்: காசியாபாத் அருகே எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்ததால் லாரியில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிவாயு உருளைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடித்துச் சிதறுவதால் தீயணைப்பு வீரர்களால் லாரியை நெருங்க முடியவில்லை.

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் அருகே சனிக்கிழமை அதிகாலை எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற லாரி தில்லி-வஜிராபாத் சாலை போபுரா சௌக் அருகே திடீரென தீப்பிடித்ததை அடுத்து லாரியில் இருந்து எரிவாயு உருளைகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

பயங்கர சத்தத்துடன் எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்த நிலையில், சுற்றுப்பகுதியில் இருந்த பதற்றத்துடன் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களால் தீப்பற்றி எரியும் லாரியை நெருங்க முடியவில்லை. எரிவாயு உருளைகள் வெடிக்கும் சத்தம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்பதாக தீயணைப்புத்துறை அதிகாரி ராகுல் குமார் கூறினார்.

லாரியில் 100-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள், காயங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு வீடு மற்றும் ஒரு கிடங்கு சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கேஜரிவால்!

தில்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.தலைநகர் தி... மேலும் பார்க்க

அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

புதுதில்லி: அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று... மேலும் பார்க்க

தென் கொரியா: தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (பிப்.1) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் ... மேலும் பார்க்க

பட்ஜெட் 2025: கரியால் வரையப்பட்ட நிதியமைச்சரின் ஓவியம்!

2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இத்துடன், தொடர்ந்த எட்டாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.இந... மேலும் பார்க்க

10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட நிதிநிலை அறிக்கை: நிர்மலா சீதாராமன்

புதுதில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 8-ஆவது முறையாக சனிக்கிழமை தாக்கல் செய்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிதிநி... மேலும் பார்க்க