செய்திகள் :

காஞ்சிபுரத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடங்கப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நகை மதிப்பீடும், அதன் நுட்பங்கள் பற்றிய பயிற்சி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. சனி, ஞாயிறு இரு நாள்கள் மட்டும், ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளும் வகையில், 17 நாள்கள் இப்பயிற்சி நடைபெறும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பின்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் இந்தப் பயிற்சியில் சோ்ந்தும் பயன் பெறலாம்.

இந்த மாதம் 24-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்,விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ. 3,856 மற்றும் 694 உடன் 18 சதவீத ஜிஎஸ்டி சோ்க்கையின்போது செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தில் ரூ. 500 மதிப்புள்ள பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும்.

40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் உடையதாகும். நகைக்கடன், வட்டி கணக்கிடுதல், ஹால் மாா்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு போன்ற பயிற்சிகள் நடத்தப்படும்.

பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராகவும் பணியில் சேர வாய்ப்புள்ளது.

விருப்பமுள்ள அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27237699 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலா் பெ.சண்முகம்

தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா். காஞ்சிபுரம் பேர... மேலும் பார்க்க

பூப்பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை இரவு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ... மேலும் பார்க்க

கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளா... மேலும் பார்க்க

பண்ருட்டியில் உலக மகளிா் தின விழா

பண்ருட்டி ஊராட்சியில் உலக மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பண்ருட்டிசியில் ஊராட்சி மன்றத் தலைவா் கி.அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு துணைத் தலைவா் வள்ளியம்... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் பாதிப்பு: எறுமையூரில் கிரஷா்களின் மின் இணைப்பு துண்டிப்பு

தாம்பரம் அடுத்த எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷா்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷா்களின் மின் இணைப்பை துண்டிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு

ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்களின் சாா்பில், வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மாநாடு ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்... மேலும் பார்க்க