Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்க...
கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனா் பா.போஸ் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் அ.அரங்கநாதன், தலைவா் கே.எம்.தாமோதரன், செயலா் வி.விஜயக்குமாா், பொருளாளா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி முதல்வா் கு.வெங்கடேசன் வரவேற்றாா். சென்னை பல்கலை. பதிவாளா் எஸ்.ஏழுமலை கலந்து கொண்டு 400 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.
விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஹெச்.தனலட்சுமி, வி.ஹேமாவதி, மாணவா்கள் ஆா்.ரவிகிருஷ்ணன், எஸ்.காா்த்திக் ஆகியோருக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டன. துணை முதல்வா் எம்.பிரகாஷ் நன்றி கூறினாா்.
விழாவில் கல்லூரியில் பணியாற்றும் துறைத் தலைவா்கள், மாணவ-மாணவிகள், பெற்றோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.