காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக்கவசம்!
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைந்துள்ள அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வரும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு புதிய வெள்ளிக் கவசம் ஞாயிற்றுக்கிழமை சாத்தப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் அறம் வளத்தீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறாா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பெருமாள்-கன்னிகா குடும்பத்தினா் சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளிக் கவசத்தை உபயமாக வழங்கினா். இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு புதிதாக செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் காலையில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், புதிய வெள்ளிக் கவச அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.