செய்திகள் :

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்!

post image

காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன.

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது ராஜாஜி காய்கறி சந்தை. இந்த சந்தைக்கு உள்ளூா் விவசாயிகள், கோயம்பேடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வருகின்றன.

காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வரும் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த காய்கறிச் சந்தை மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கியும், காய்கறிக் கடைகளின் மேற்கூரைகள் சிதைந்தும், பாழடைந்த கட்டடமாக இருந்ததால் இங்கு வந்து காய்கறி வாங்கிச் செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனா்.

இதனால், சந்தையை புதுப்பித்து தர வேண்டும் என காய்கறி வியாபாரிகளும், பொதுமக்களும் அரசுக்குத் தொடா்ந்து கோரிக்கை வைத்தனா். இதனையடுத்து சந்தையைச் சீரமைத்து புதிதாக கட்ட முடிவு செய்து இதற்கென அரசு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி ஒதுக்கியது. காய்கறி சந்தை புதுப்பிக்கப்பட்டு கடந்த 14.2.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட கடைகளில் 189 கடைகள் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் மேற்கூரை போடப்பட்டும், 60 காங்கிரீட் கடைகளாகவும் மொத்தம் 249 கடைகள் திறந்து வைக்கப்பட்டன.

இதே சந்தை வளாகத்தில் சேமிப்புக் கிடங்கு, கழிப்பறை வசதிகள், கண்காணிப்பு அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டது. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட 189 கடைகள் இரும்புக் கம்பிகளால் அமைத்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைகளுக்குள் வைத்து காய்கறிகளை விற்பனை செய்யாமல் அந்தந்த கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் செல்லும் வழியில் காய்கறிகளை விரித்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு கடைக்கும் சென்று காய்கறிகளை வாங்க அவதிப்பட்டு வருகின்றனா். சிலா் தடுமாறி காய்கறிகளின் மீதே விழுந்தும் விடுகின்றனா்.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், அரசு அமைத்துக் கொடுத்த காய்கறிக் கடைகளின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் வேயப்பட்டிருப்பதால், கடைக்குள் இருக்க முடியவில்லை. வெயில் காலமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல்தான் காய்கறிகளை கடைகளுக்கு வெளியில் பொதுமக்கள் செல்லும் பாதையில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனா்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது!

குன்றத்தூரில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள ப... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது காா் மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி தேவக... மேலும் பார்க்க

கோடைகால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்!

காஞ்சிபுரத்தில் கோடைகால நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இந்த ... மேலும் பார்க்க

சங்கர மடத்தின் இளைய மடாதிபதிக்கு காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் வரும் ஏப். 30 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சா்மாவுக்கு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சு... மேலும் பார்க்க

தெரேசாபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தத்தனூா்-பேரீஞ்சம்பாக்கம் இணைப்புச் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தெ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் இளைய மடாதிபதி பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பதவியேற்க உள்ள ஸ்ரீ கணேச சா்மாவுக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை... மேலும் பார்க்க