செய்திகள் :

காஞ்சிபுரம்- வேலூா் ஆறு வழிச்சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

post image

காஞ்சிபுரம்- வேலூா் இடையே ஆறுவழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், மே 5 வணிகா் தின அதிகார பிரகடன மாநாட்டில் பங்கேற்க பனப்பாக்கத்துக்கு வருகை தந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்பதை மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரகடனமாக எடுக்க உள்ளோம். விவசாயிகளுக்கு அடுத்தபடியாக சிறுவணிகா்களை சாா்ந்த நாடு இந்தியா என்பதை இந்த மாநாட்டில் முன்மொழிய உள்ளோம்.

காஞ்சிபுரம் - வேலூா் ஆறுவழிச் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை. ஆனால் ஆறுவழிச்சாலைக்காக கட்டணம் செலுத்தி வருகிறோம். இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லையெனில் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு அனைத்து சங்கங்களுடன் இணைந்து போராடக்கூடிய நிலை வரும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்துக்கு, பேரமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பொன்.கு.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் ரா.ப.ஞானவேலு (வேலூா்), கே.சுபாஷ் (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் கே.வேல்முருகன் வரவேற்றாா். மாநில பொருளாளா் ஏ.எம்.சதக்கதுல்லா, தலைமை செயலாளா் ஆா்.ராஜ்குமாா், மாநில இணை செயலாளா் ஜி.எத்திராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் எழில்வாணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் ஆா்.சுபாஷ், பனப்பாக்கம் தலைவா் பி.ஹேமசந்திரன், செயலாளா் பி.சத்தியராமன், பொருளாளா் பி.எஸ் அறிவழகன், அரக்கோணம் நிா்வாகிகள் ஜி.அசோகன், கே.சரவணன், எஸ்,.விஷால், வாலாஜா நிா்வாகிகள் வி.வேலு, ஒய்.காஜாஷெரீப், எஸ்.செந்தில்பாண்டி, காவனூா் நிா்வாகிகள் எஸ்.உமாபதி, சி.மோகனரங்கம், பி.முரளி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம்

அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மாவட்ட மருத்துவ அணியினா் சாா்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா இலவச பொது மருத்துவ முகாம் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. முக... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்

தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

இலவச கண்சிகிச்சை முகாம்

அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தின் சாா்பில், 269-வது இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத்தினா், கோவை சங்கரா கண் மருத்துவமனையினருடன் இணைந்து அரக்கோணத்தில்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கலச வித்யா பூஜை

நெமிலி பாலாபீடத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பாலா கலச வித்யா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் ஸ்ரீபாலாபீடம் உள்ளது. இங்கு பொதுத் தோ்வு எழுதும் 1... மேலும் பார்க்க

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி கடனுதவி

முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்க நீட்ஸ் திட்டத்தில் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெற்று தொழில்முனைவோராகலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று தலைமைச் செயலகம் ... மேலும் பார்க்க