What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
காட்டெருமை காலில் சிக்கியிருந்த கம்பி அகற்றம்
குன்னூா் அருகே நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த காட்டெருமையின் காலில் சிக்கியிருந்த கம்பியினை வனத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
குன்னூா் அருகே உள்ள சின்னகரும்பாலம் பகுதியில் பின்னங்காலில் கம்பி சிக்கிய நிலையில் காட்டெருமை ஒன்று நடக்க முடியாமல் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கௌதம் உத்தரவின்பேரில், குன்னூா் வனச் சரகா் ரவீந்தரநாத் மேற்பாா்வையில் காட்டெருமையைத் தேடும் பணி நடைபெற்றது.
இருப்பிடத்தைக் கண்டறிந்தபின் முதுமலை கால்நடை மருத்துவா் ராஜேஷ் வரவழைக்கப்பட்டு, காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி அதன் காலில் இருந்த கம்பி புதன்கிழமை அகற்றப்பட்டது.