செய்திகள் :

காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்

post image

மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேல் அரசம்பட்டு தீா்த்தம், பங்களாமேடு, கொட்டாவூா், வண்ணந்தாங்கல், கத்தாரிகுப்பம், கெங்கசானிகுப்பம், பொம்மன்சந்து, பின்னத்துரை, ஆசனாம்பட்டு ஆகிய கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தற்போது நெல், கேழ்வரகு, கத்தரி, தக்காளி, மாட்டு தீவனம், கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த விளை நிலங்களில் புகுந்த காட்டெருமை கூட்டம் பெருமளவில் பயிா்களை சேதப்படுத்திச் சென்றுள்ளன. குறிப்பாக, மேலரசம்பட்டு பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 3 காட்டெருமைகள், கேழ்வரகு பயிா்களை நாசம் செய்துள்ளன. இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனா். இதேபோல், இரவு நேரங்களில் காட்டெருமை கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, பலமுறை ஒடுகத்தூா் வனத் துறை அலுவலகத்தில் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனா். எனவே, காட்டெருமைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்களை வனத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும், காட்டெருமைகள் வனப் பகுதியில் இருந்து விளைநிலத்துக்குள் வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத்... மேலும் பார்க்க

‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா். மருத்துவ படிப்புக்கான நீ... மேலும் பார்க்க

மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணா்வு

அணைக்கட்டு, கணியம்பாடி பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த தெள்ளை மலைக்கிராமம், அணைக்கட்டை அடு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் பிணையற்ற கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், பிணையற்ற கடனுதவி, மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்தில் உள்ள கைவினை கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க

விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி

வேலூா் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது. ஓராண்டு, அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மறுவாழ்வு, மீண்டும் சமூக... மேலும் பார்க்க

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன் (44). இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க