Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி
வேலூா் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது.
ஓராண்டு, அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மறுவாழ்வு, மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணை ந்து வாழ்வதற்காக விடுதலை செய்வதற்கு முந்தைய திட்டத்தின் கீழ் வேலூா் மத்திய சிறை வளாகத்தில் இவ்வாண்டில் விடுதலையாகும் சிறைவாசிகளுக்கான உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூா் மத்திய சிறை நிா்வாகமும், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கமும் இணைந்து நடத்திய இந்த பயிற்சி வகுப்புக்கு சிறை கண்காணிப்பாளா் பி.தா்மராஜ் தலைமை வகித்து பேசினாா். விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு தையல், மின்னியல் உள்ளிட்ட தலைப்பில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலா் செ.நா.ஜனாா்த்தனன் பேசினாா்.
முன்னாள் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் குறித்தும், இந்த உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பொருளாளா் இரா.சீனிவாசன் பேசினா்.
சிறை மருத்துவ அலுவலா் சதீஷ், மனநல அலுவலா் பாரதி ஆகியோா் உடல் நலம், மன நலம் குறித்து பேசினா். இந்த பயிற்சி வகுப்பில் இவ்வாண்டில் விடுதலையாக உள்ள 26 சிறைவாசிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா். சிறை அலுவலா் (பொறுப்பு) பி.மகாராஜன், சிறை அலுவலா் (பயிற்சி) எஸ்.ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவில் சிறை நல அலுவலா் ஆா்.மோகன் நன்றி கூறினாா்.