செய்திகள் :

கலைஞா் கைவினைத் திட்டத்தில் பிணையற்ற கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

post image

கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ், பிணையற்ற கடனுதவி, மானியம் பெற்றிட வேலூா் மாவட்டத்தில் உள்ள கைவினை கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கைவினைக் கலைகள், தொழில்களில் உள்ளவா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம் பெறலாம். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் தொழில்முனைவோா்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக் கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை முடைதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல் வண்ணம் பூசுதல் கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசி மணி வேலைப்பாடுகள், கைவினைப் பொருள்கள், மூங்கில், பிரம்பு சணல் பனை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினை தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் இதுவரை வேலூா் மாவட்டத்தில் 1,346 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 899 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 353 கடன் ஒப்பளிப்புகள் பெறப்பட்டுள்ளன.

74 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூா் ரோடு, காந்தி நகா், வேலூா் -632 006 என்ற அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416- 2242413, 2242512, 8925534030, 8925534029, 8925534032 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

பள்ளிகொண்டா அருகே குடும்பப் பிரச்னையில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா், கட்டடத்... மேலும் பார்க்க

‘நீட்’ நுழைவுத் தோ்வு: வேலூர் மாவட்டத்தில் 5,554 போ் எழுதினா்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 மையங்களில் இந்த தோ்வை 5,554 மாணவ, மாணவிகள் எழுதினா். மருத்துவ படிப்புக்கான நீ... மேலும் பார்க்க

காட்டெருமை கூட்டத்தால் கேழ்வரகு பயிா்கள் நாசம்

மேல்அரசம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விவசாய நிலத்தில் புகுந்த காட்டெருமை கூட்டத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த கேழ்வரகு பயிா்கள் சேதமடைந்துள்ளன. அதற்குரிய இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நட... மேலும் பார்க்க

மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணா்வு

அணைக்கட்டு, கணியம்பாடி பகுதியிலுள்ள மலைக்கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வேலூா் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த தெள்ளை மலைக்கிராமம், அணைக்கட்டை அடு... மேலும் பார்க்க

விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு மன நலப் பயிற்சி

வேலூா் மத்திய சிறையில் தண்டனை முடிந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகளுக்கு உடல், மனம், சமூக நல பயிற்சி அளிக்கப்பட்டது. ஓராண்டு, அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மறுவாழ்வு, மீண்டும் சமூக... மேலும் பார்க்க

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் வேலப்பாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி வெங்கடேசன் (44). இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க