காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
குடியாத்தம் அருகே காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.
குடியாத்தம் அடுத்த புதுப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டனின் மனைவி மணி சுதா (28) இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த மணி சுதா காணாமல் போனாா்.
இதற்கிடையே, திங்கள்கிழமை குடியாத்தம்-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற மணி சுதா அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக கணவா் மணிகண்டனுக்கு தகவல் தெரிந்தது.
ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.