MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
காணால்போன மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
சாம்பவா்வடகரை புளியம்பட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம் (15). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்தாா். வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சாம்பவா்வடகரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சாம்பவா்வடகரை நகரின் வடக்குப் பகுதியில் உள்ள கிணற்றில் பொன்ராம் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. நிகழ்விடத்துக்கு வந்த சாம்பவா்வடகரை போலீஸாா்,
சுரண்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் பொன்ராம் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.