``காதல் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!'' -திருணம் குறித்து மனம் திறக்கும் பாவ்னி!
பிக் பாஸ் வீட்டில் காதலை தொடங்கி, கடந்த 2023-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தங்களின் காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அமீர் - பாவ்னி ஜோடி அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்தாண்டு காதலர் தினத்தன்று தங்களின் திருமண தேதியையையும் இந்த ஜோடி அறிவித்தனர். இவர்களின் திருமணம் ஏப்ரல் 20-ம் தேதி கிழக்கு கடற்கரைச் சாலையில் வைத்து நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி ஒரு ஹல்தி கொண்டாட்டைத்தையும், திருமணத்தன்று மாலை வரவேற்பு நிகழ்வையும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் திருமணம் குறித்து பாவ்னி பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், ``அமீர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் எங்களின் திருமணம் மதம் சார்ந்து நடைபெறாது. நாங்கள் இருவரும் ஒன்றாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். நான் வீட்டில் பூஜைகளை மேற்கொள்வேன். அதே சமயம் அவர் நமாஸ் செய்வார். ரமலான் பண்டிகை சமயத்தில் அவருக்கு நான் உதவியாக இருப்பேன். அமீரின் பெற்றோர்கள் கிறிஸ்துவர்கள் என்பதால் நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடுவோம்.

அதனால் திருமணத்திற்காக எங்களில் யாராவது ஒருவர் மதம் மாற தேவையில்லை என நாங்கள் உணர்கிறோம். பரஸ்பரம் நாங்கள் இருவரின் நம்பிக்கையை மதிக்கிறோம். காதல் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. நண்பன் என்பதை தாண்டி அமீரை எனது மனிதராக நினைக்கிறேன். நான் அனைத்து விஷயங்களையும் அவரிடம் பகிர்ந்துவிடுவேன். எனக்கு போர் அடித்தாலும் நான் சொல்வதை அவர் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் என் என்னுடைய எண்ண சுழற்சிகளை முழுமையாக புரிந்துக் கொண்டவர். நான் நானாக இருப்பதற்கு அமீர் சுதந்திரத்தைக் கொடுப்பார். நான் எனது தந்தையிடம் மிஸ் செய்யும் அன்பை அமீர் எனக்குக் கொடுக்கிறார்." எனக் கூறியிருக்கிறார்.