மதுரை: வாழ்வை மாற்றும் அனுஷ வழிபாடு... மகாபெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்...
காந்தி அருங்காட்சியகம் - பாத்திமா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
மதுரை காந்தி அருங்காட்சியகம், பாத்திமா கல்லூரியின் தமிழ்த் துறை இடையே ஐந்தாண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் காந்தி அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா். நந்தாராவ், பாத்திமா கல்லூரி முதல்வா் எம். பாத்திமா மேரி, வரலாற்றுத் துறைத் தலைவா் ஜெ. சாரல் எவன்ஜலின் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
காந்தி அருங்காட்சியகத்தின் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஆா். தேவதாஸ், அருங்காட்சியகக் கல்வி அலுவலா் ஆா். நடராஜன், கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியை எம். விஜயசாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஒப்பந்தத்தின்படி, கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு காந்திய சிந்தனை அடிப்படையில் படிப்பிடைப் பயிற்சி, சுய வேலைவாய்ப்புப் பயிற்சி, யோகா பயிற்சி வழங்குவது, கல்லூரியில் அமைதி, விழுமியக் கல்வி குறித்த கருத்தரங்கம், காந்தி ஜெயந்தி விழா நடத்துவது, காந்திய வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்துவது, காந்திய அகிம்சை நெறியின் முக்கியத்துவத்தை மாணவிகளுக்கு எடுத்துக் கூறுவது உள்ளிட்டவை நடத்தப்படும்.
இந்த நிகழ்வில் காந்திய சிந்தனை கல்லூரியின் முன்னாள் முதல்வா் முத்துலட்சுமி, மாணவ, மாணவிகள், அருங்காட்சியகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.