செய்திகள் :

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

post image

காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இன்று (ஆக. 25) தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், இன்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில், இந்திய வீராங்கனையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு பங்கேற்றார்.

48 கிலோ எடை பெண்கள் பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 193 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதன்மூலம், அடுத்த ஆண்டு காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிக்கு நேரடியாக மீரபாய் சானு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது காயம் ஏற்பட்டதால், பல மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். பின்னர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று 4 வது இடத்தைப் பிடித்தார்.

தற்போது, காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதையும் படிக்க | பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

Mirabai Chanu secured gold in Commonwealth Weightlifting C'ships on competitive return, books spot in 2026 CWG

பெனால்டியை தவறவிட்ட யுனைடெட் வீரர்: மோசமான சாதனையிலும் பங்கேற்பு!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் தவறவிட்ட பெனால்டியால் அந்த வெற்றி பெறாமல் போட்டி சமனில் முடிந்தது. இதற்காக அந்த அணியின் சொந்த ரசிகர்களாலே அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இங்கி... மேலும் பார்க்க

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிறபகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்த... மேலும் பார்க்க

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் தன் தோழி கெனிஷா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைப... மேலும் பார்க்க

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் மணிகண்டன் குறித்து பேசியுள்ளார். நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற... மேலும் பார்க்க

கடவுளை முட்டாளக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெ... மேலும் பார்க்க

ரவி மோகன் இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென... மேலும் பார்க்க