நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்
காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்; மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஆல்ரவுண்டர்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!
மும்பை அணியில் கார்பின் போஸ்ச்
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், மும்பை அணியிலிருந்து முழங்கால் காயம் காரணமாக விலகிய லிஸாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
— Mumbai Indians (@mipaltan) March 8, 2025
South African all-rounder Corbin Bosch has been signed by Mumbai Indians as a replacement for Lizaad Williams, who has been ruled out of TATA IPL 2025 due to an injury.
Corbin was a part of the victorious… pic.twitter.com/4cE5Rjr5x6
இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கார்பின் போஸ்ச் அணியில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதாகும் கார்பின் போஸ்ச் இதுவரை 86 டி20 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் மும்பை கேப் டவுன் அணிக்காக விளையாடியுள்ளபோதிலும், இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் விளையாடியது இல்லை. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார்.
இதையும் படிக்க: இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை!
மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற மார்ச் 23 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.