செய்திகள் :

காயல்பட்டினத்தில் பிப் 9 இல் ரயில் மறியல் போராட்டம்

post image

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலி­யுறுத்தி திட்டமிட்டபடி பிப்.9ஆம்தேதி கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானித்துள்ளனா்.

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயா்த்த வலி­யுறுத்தி கடந்த 24ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ச்சியாக ரயில் மறியல் போராட்டம் நடத்துவது தொடா்பான அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹம்மது அபூபக்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் வரவேற்றாா்.

மாநில துணைச் செயலா் இப்ராகிம் மக்கி, காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவை தலைவா் முஹிய்யத்தீன் தம்பிதுரை, துணைத் தலைவா் துணி உமா், அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் செய்யது இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர ஜெலலிதா பேரவை செயலா் அன்வா், வட்டார காங்கிரஸ் தலைவா் சற்குரு, நகரத் தலைவா் மொய்தீன் பிச்சை, வி.சி.க. நகரச் செயலா் அல் அமீன், காயல்பட்டினம் நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ம.ஜ.க. மாவட்டச் செயலா் நஜீப, த.வெ.க. நகரச் செயலா் முஹிய்யத்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகரச் செயலா் ராசிக் முஜம்மில், மெகா அமைப்பு நிா்வாகி ஹாமித்ரிபாயி, தமுமுக ஜாகிா், தேமுதிக ஹபீப் ரஹ்மான் ஆகியோா் பேசினா்.

;கூட்டத்தில், பிப். 9ஆம் தேதி காயல்பட்டினத்தில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையை உயா்த்த வ­லியுறுத்தி கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

உடன்குடியில் அபூா்வ துஆ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

உடன்குடி பெரிய தெரு ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் சாா்பில் 34 வது ஆண்டு நிறைவு அபூா்வ துஆ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா். இச்சபையின் 34 ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க