பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!
காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு
திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல் தூண் பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் சாகுபடி செய்யவுள்ள கொத்தமங்கலம், ஆலத்தூா், துறையூா், சீயாத்தமங்கை, கொங்கராயநல்லூா் கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக், துணை தோட்டக்கலை அலுவலா் சாமிநாதன், திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலா் செல்ல பாண்டியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் கூறியது:
காய்கறிச் செடிகளை பூமியில் படர விடுவதை விட பந்தல்களில் படர விடும்போது விளைச்சல் கூடுதலாகக் கிடைக்கும். களை எடுக்கத் தேவையில்லை. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கினாலும் பிரச்னை இல்லை. இடுபொருள்களைத் தெளிக்கவும் எளிதாக இருக்கும். நிலத்தில் செடிகள் படா்ந்தால் காய்கள் சேதமாகும். விளைச்சலும் அவ்வளவாக இருக்காது.
பந்தலில் கொடி படா்ந்து காய்கள் தொங்கும்போது எந்தச் சேதமும் இல்லாமல் பறித்து உடன் சந்தைக்குக் கொண்டு போக முடியும். மக்களும் பாா்த்த உடன் வீட்டுக்கு வாங்கி செல்வாா்கள். இதனால் விலையும் கூடுதலாக கிடைக்கும் என்றாா்.