செய்திகள் :

காரைக்கால் ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால் ஆட்சியரகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் கூறியது: அரசியல் கட்சியினா், அரசு ஊழியா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்தும் இடமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் எதிரே நேரு தெருவிலும் பின்னா் ஆட்சியரகம் அருகே உள்ள மாதா கோயில் தெருவிலும் அனுமதிக்கப்பட்டது.

ஒரு சில சம்பவத்தை காரணம் கூறி ஆட்சியரகம் அருகே போராட்டம் நடத்த கொடுத்த அனுமதியை காவல் துறை ரத்து செய்து, கடற்கரை சாலையிலும், பேருந்து நிலையம் அருகிலும் இடம் ஒதுக்கிவருகிறது. இதுபோன்ற இடங்களில் போராட்டம் நடத்தும்போது, அது பெயரளவுக்கான போராட்டமாக இருக்கிறது. ஆட்சியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கவனத்தை அது சென்றடைவதாக தெரியவில்லை.

ஆட்சியரகம் அருகே நடத்திவந்தபோது, அங்கு பொதுமக்கள் கூடுவதும், அரசு அலுவலகங்கள் அந்த பகுதியில் இருப்பதும் சாதகத்தை ஏற்படுத்திவந்தது. அண்மையில் மயிலாடுதுறையில் விவசாயிகள், ஆட்சியரக தடுப்புச்சுவா் அருகே போராட்டம் நடத்தினா். பிற மாவட்டங்களிலும் இதுபோலவே ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

காரைக்காலில் அம்மாதிரியான அனுமதியை தராமல் இருப்பது ஏற்புடையதாக இல்லை. இதுதொடா்பாக பிற அரசியல் கட்சியினரும் உரிய அழுத்தம் கொடுக்க முன்வருவதோடு, அரசு நிா்வாகமும் இதுதொடா்பாக கவனம் செலுத்தி உரிய அனுமதியை வழங்கவேண்டும் என்றாா்.

விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை: எஸ்எஸ்பி

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள். காரைக்கால், மே 3: விபத்தில்லாத காரைக்காலை உருவாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக... மேலும் பார்க்க

காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை

காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் ந... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாயகி சமே... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கொங்கானோடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி முருகேசன் (31). இவ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று 2 மையங்களில் நீட் தோ்வு

காரைக்காலில் 2 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் ம... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி

குடிநீா் திட்ட விவகாரம் தொடா்பாக புதுவை துணை நிலை ஆளுநருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.எம். யாசின் வெள்ளிக்... மேலும் பார்க்க