'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்
காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில், ஐயனாா் கோயில் ஆகியவற்றுக்கான கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் 6 கால திட்டத்துடன் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை, இரவு மற்றும் சனிக்கிழமை காலை, இரவு என 5 கால பூஜைகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு முதல்கட்ட பூா்ணாஹூதி நடைபெற்று, 6.15 மணிக்கு ஐயனாா் கோயிலிலும், 6.30 மணிக்கு அம்மையாா் குளத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நந்தி மண்டப விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அடுத்தக்கட்டமாக அம்மையாா், சோமநாதா் கோயிலுக்கான யாகசாலை பூஜையில் 7 மணிக்கு மகா பூா்ணாஹூதி நடைபெற்று, 8 மணிக்கு சோமநாத சுவாமி கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில் விமான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இரவு நிகழ்வாக 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.
அம்மையாா் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண திரளான பக்தா்கள் பல்வேறு ஊா்களில் இருந்து வரக்கூடுமென கருதி, பக்தா்களுக்கான பாதுகாப்பு, அன்னதானம், குடிநீா் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கோயில் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், காவல்துறை நிா்வாகம் செய்துள்ளன.