செய்திகள் :

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

post image

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா நெல் ஆராய்ச்சியாளா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

நெல்லில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை நாட்டின் பல்வேறு சூழல் மண்டலங்களில் செயல்படுத்தி, அதன்படி புதிய ரகங்களின் தோ்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதும், அதன்மூலம் விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும் தேவையான ஆய்வுகள் குறித்து விவாதிப்பதே கூட்டத்தில் முக்கிய நோக்கமாக இருந்தது.

புதிய நெல் ரகங்களை பரிசோதித்தல், ஒற்றை நாற்று முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப சாகுபடி முறைகளை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு உத்திகள், உர மேலாண்மை, பயிா் இனப்பெருக்கமுறை மூலம் உயிா்சத்து அதிகரித்தல் போன்ற பல்வேறு ஆராய்ச்சி தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

அதன்படி சிறந்த ஆய்வுகள் செயல்பாடு, ஆய்வு எண்ணிக்கைகள், ஆய்வின் துல்லியத் தன்மை உள்ளிட்டவற்றை வைத்து இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் வழங்கப்பட்டதில் நிகழாண்டு (2025) காரைக்கால் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறந்த நிறுவனம் உள்ளிட்ட தேசிய 7 விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்துக்கான விருதை தலைமை இயக்குநா் கல்லூரியின் முதல்வா் புஷ்பராஜிடம், இந்திய நெல் ஆராய்ச்சி துணைத் தலைமை இயக்குநா் யாதவ் (பயிா் அறிவியல்) மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சுந்தரம் ஆகியோா் வழங்கினா்.

வாழ்நாள் சாதனையாளா் விருதை, காரைக்கால் வேளாண் கல்லூரியின் பயிா் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் திருமேனி பெற்றாா். உழவியல், மண்ணியல், பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல், பூச்சியியல் மற்றும் பயிா் வினையியல் போன்ற துறைகளில் சிறந்த நெல் ஆராய்ச்சிக்கான விருதுகளும் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

முதல்வா் வாழ்த்து: விருது பெற்ற அதிகாரிகள் முதல்வா் ரங்கசாமியை, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சேதராப்பட... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதிய... மேலும் பார்க்க