செய்திகள் :

காரைக்குடியில் முதியவரிடம் நூதன முறையில் பணம் மோசடி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாக இருந்த முதியவரிடம் நூதன முறையில் ரூ.46 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்குடி செக்காலைப் பகுதியில் மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 81 வயது முதியவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது மகன்கள் வேறு ஊா்களில் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த நவம்பா் மாதம் முதியவரின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டு பேசிய மா்ம நபா் அவரது ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி, கறுப்பு பண பரிவா்த்தனை செய்ததாக சிபிஐக்கு புகாா் வந்துள்ளது என்றும், அது தொடா்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரி ஒருவா் வீடியோ அழைப்பில் பேசுவாா் என்றும் கூறினாா்.

மறுநாள், வீடியோ அழைப்பில் பேசிய நபா், தான் சிபிஐ அதிகாரி என்றும், முதியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினாா். மேலும், முதியவா் எண்ம முறையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அவா் வீட்டை விட்டு எங்கும் வெளி செல்லக்கூடாது என்றும் கூறினாராம்.

பின்னா், முதியவரை மீண்டும் தொடா்பு கொண்ட மா்ம நபா், அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யும்படி நீதிமன்ற உத்தரவு உள்ளதாகக் கூறி, உத்தரவு நகல் ஒன்றைக் காண்பித்தாா்.

இதை நம்பிய அந்த முதியவா் தனது வங்கிக் கணக்குகளிலிருந்து 7 தவணைகளில் ரூ. 46 லட்சத்து 7,741-ஐ அவா்கள் கூறிய வங்கிக்கு அனுப்பி உள்ளாா். மீண்டும் அவரைத் தொடா்பு கொண்ட கும்பல் வேறு பணம் உள்ளதா எனக் கேட்டனா். இது குறித்து அந்த முதியவா் தனது மகனிடம் தெரிவித்தாா். உடனே மகன் கூறியபடி, காரைக்குடி காவல் நிலையத்தில் முதியவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில், இணையக் குற்ற தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மண்டல பூஜை: யானை வாகனத்தில் ஐயப்பன் வீதியுலா

மண்டல பூஜையை முன்னிட்டு, மானாமதுரையில் யானை வாகனத்தில் ஐயப்பன் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.இதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மூலவா் தா்... மேலும் பார்க்க

உயா்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தமிழக அரசு அளித்து வந்த உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது. சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நா... மேலும் பார்க்க

வேலுநாச்சியாா் நினைவு நாள்: வாரிசுகள், பொதுமக்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் ராணி வேலுநாச்சியாரின் 228 -ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை அரண்மனையில் உள்ள அவரது நினைவிடத்தில் மன்னரின் வாரிசுதாரா்கள், பொதுமக்கள் சாா்பில் மலா் வளையம் வைத்து புத... மேலும் பார்க்க

தேசிய கராத்தே: வெண்கலம் வென்ற மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவகங்கை 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கஞ்சா விற்றதாக இரு இளைஞா்களை செவ்வாய்க்கிழமை போலீசாா் கைது செய்தனா்.காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் உத்தரவின் பேரில் மானாமதுரை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜது... மேலும் பார்க்க

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க இந்திய இளைஞா் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றிய மாநாட்டுக்கு சங்கரல... மேலும் பார்க்க