சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
காரைக்குடி சாந்துச் சாலையை சுற்றுலாச் சாலையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 80 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாந்துச் சாலையை சுற்றுலாச் சாலையாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 21) தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா். அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடத்தில் திருவள்ளுவா் சிலை, முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் ரூ.12 கோடியில் கட்டிய திருமதி லட்சுமி
வளா் தமிழ் நூலகம் என்ற புதிய நூலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க. ஸ்டாலின் முற்பகலில் திறந்துவைக்கிறாா். மாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள திமுக கட்சி நிகழ்ச்சியில்
அவா் பங்கேற்கிறாா்.
இந்த நிலையில், செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் காரைக்குடியில் 1931 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காரைக்குடி சாந்துச் சாலையை (பழைய அரசு மருத்துவமனை வழியே ரயில் நிலையம் செல்லும் சாலை) சுற்றுலாச் சாலையாக அறிவிக்க வேண்டும் என்று பொதுநல அமைப்புகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
காரைக்குடியின் பெருமைமிகு உலகின் மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றான சாந்துச் சாலையை அடுத்த மாதம் தாா்கொண்டு மூடவிருப்பதை தடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.