MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா்.
காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்த நிலையில், அவா் மதுரை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய நாராயணன் காரைக்குடி மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, புதிய ஆணையா் நாராயணனை மேயா் சே. முத்துத்துரை வெள்ளிக்கிழமை பூங்கொத்து வழங்கி வரவேற்று, வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.