செய்திகள் :

காரைக்குடி: "மேயரை மாற்ற வேண்டும்" - திமுக துணை மேயர் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் மனு

post image

காரைக்குடி மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் முத்துதுரை
மேயர் முத்துதுரை

வரி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் மதுரை மாநகராட்சியில் பொறுப்பு வகித்த 5 மண்டலத் தலைவர்களை, திமுக தலைமை ராஜினாமா செய்ய வைத்துள்ளதுடன், மேயரையும் மாற்ற உள்ளதாகப் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

காரைக்குடி துணை மேயரும், திமுக நகரச் செயலாளருமான குணசேகரன் தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயர் முத்துதுரைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காரைக்குடி நகராட்சி சேர்மனாக இருந்த முத்துதுரை, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு மேயராகப் பொறுப்பு வகிக்கிறார்.

முத்துதுரைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும்கட்சி உறுப்பினர்களாலும் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர் என்பதால் கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மேயர் முத்துதுரை

இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. 36 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தை துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 பேர் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

அதன் பின்பு துணை மேயர் குணசேகரன் தலைமையில் 22 மாமன்ற உறுப்பினர்கள், மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் குணசேகரன், "இது காரைக்குடி மாநகராட்சி நலனுக்காக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. மேயர் அவருடைய வார்டைத் தவிர எந்த வார்டுக்கும் நிதி ஒதுக்குவதில்லை.

கவுன்சிலர்களை மிகவும் மோசமாக நடத்துகிறார். மரியாதையாகப் பேசுவதில்லை. அதனால், அவரை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளோம். இப்போது 22 பேருடன் இன்னும் 2 கவுன்சிலர்களும் கையெழுத்திட உள்ளார்கள்." என்றார்.

இந்த சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" - கேரளாவில் அமித் ஷா

கேரள மாநில பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்துவைத்தார். பின்னர் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில்... மேலும் பார்க்க

லாக்கப் டெத் - குடும்பங்களை சந்திக்கும் விஜய்! - ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைக்க திட்டம்?

'லாக்கப் மரணங்கள்!'கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரின் கொடுமையால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து பேசவிருக்கிறார்.விஜய்சிவகங்கை மடப்புரத்தில் அஜித் குமார் என்கிற இளைஞர் காவல்து... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு கூறியதாவது..."இப்போதே எந்த முடிவிற்கும் வந்துவிட வேண்டா... மேலும் பார்க்க

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க