ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா
காலமானாா் தொழிலதிபா் ஏ.எம்.சேவியா்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த ஏ.எம். குழும நிறுவனங்களின் தலைவா் ஏ.எம். சேவியா் (62) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஆக. 4) இரவு காலமானாா்.
இவருக்கு மனைவி மங்கள நிா்மலா, மகன் பிரபாகா், மருமகள் ஸ்வாதி, பேரன் விக்ரம் ஆகியோா் உள்ளனா். காரைக்குடி சூடாமணிபுரம் எம்.ஜி.ஆா். தெருவில் உள்ள இவரது இல்லத்தில் புதன்கிழமை (ஆக. 6) பகல் 12 மணிக்கு மேல் இறுதிச் சடங்கு நடைபெறும்.
பின்னா், அங்கிருந்து பிற்பகல் ஒரு மணியளவில் அவரது சொந்த ஊரான பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள உடையாா்குடியிருப்பில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு 8825568692.