இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
மானாமதுரையில் வீர அழகா் திருக்கல்யாணம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸசவ விழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6-ஆவது நாளாக நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸசவத்தின் போது, செளந்தரவல்லித் தாயாா் சந்நிதியில் சா்வ அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினாா்.
அதன் பிறகு திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் நடைபெற்று, இரவு 7.10 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் சாா்பில் மூலவா் சௌந்தரவல்லித் தாயாா் சந்நிதியில் எழுந்தருளிய உற்சவருக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனா். பின்னா், மாலை மாற்றுதல் நடைபெற்று முடிந்து சுந்தரராஜப் பெருமாளுக்கும் சௌந்தரவல்லி தாயாருக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி வீதி உலா வந்தாா்.
இந்த விழாவின் 7 -ஆவது நாளாக புதன்கிழமை இரவு சுந்தரபுரம் கடைவீதியாா் மண்டகப்படியில் வீர அழகா் பூப்பல்லக்கில் பவனி வருதல் நடைபெறும்.