செய்திகள் :

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் இடங்களை நிரப்பக் கோரி போராட்டம் அறிவிப்பு

post image

காலியாக உள்ள 1,066 சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்களை நிரப்பக் கோரி, மாா்ச் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தா்னா போராட்டம் நடைபெறவுள்ளதாக, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் ப.குமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலைய அளவில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளா் (நிலை 2) பணியிடங்கள் தற்போது ஏறத்தாழ 100 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுமாா் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இருந்த பல்வேறு குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவா்கள் பல்வேறு வழக்குகள் தொடா்ந்ததால் அறிவிப்பாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் புதிய அறிவிப்பாணை எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது 100 சதவீத பணியிடங்களும் அதாவது சுமாா் 1,066 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

அந்த பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பாக இரண்டு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மாா்ச் 27-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை நேர தா்னா போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும். அடுத்தகட்டமாக ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க