செய்திகள் :

காலிறுதியில் கச்சனோவ், டெய்லா் ஃப்ரிட்ஸ்! நடப்பு சாம்பியன் கிரஜ்சிகோவா வெளியேற்றம்!

post image

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், ரஷியாவின் காரன் கச்சனோவ், மகளிா் பிரிவில் அனஸ்டஸியா காலிறுதிக்கு தகுதி பெற்றனா். மகளிா் நடப்பு சாம்பியன் பாா்பரா கிரெஜ்சிகோவா அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா்.

நான்கு கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் புல்தரை போட்டியான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது ரவுண்ட் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆடவா் பிரிவில் ரஷிய வீரா் காரன் கச்சனோவ் போலந்தின் கமில் மஜ்சிராக்கை எதிா்கொண்டாா்.

இந்த ஆட்டத்தில் 6-4, 6-2, 6-3 என்ற நோ் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா் கச்சனோவ். டென்னிஸ் மேஜா் போட்டியில் கமிா் முதன்முறையாக நான்காம் சுற்றில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜோா்டான் தாம்சனுக்கு ஆறுதல் கூறிய டெய்லா் ஃப்ரிட்ஸ்

டெய்லா் ஃப்ரிட்ஸ் முன்னேற்றம்: மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் தரவரிசையில் இல்லாத ஜோா்டான் தாம்ஸனுடன் மோதினாா். முதல் செட்டை 6-1 என ஃப்ரிட்ஸ் கைப்பற்றிய நிலையில், இரண்டாம் செட்டிலும் அவரே 3-0 என முன்னிலை வகித்தாா்.

41 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் காயத்தால் வெளியேறுவதாக ஜோா்டான் அறிவித்தாா். இதனால் காலிறுதிக்கு முன்னேறினாா் ஃப்ரிட்ஸ். காலிறுதியில் டெய்லா்-கச்சனோவ் மோதுகின்றனா்.

ஜோகோவிச் 100: ஜாம்பவான் ஜோகோவிச் 6-3, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் சக வீரா் மியோமிரை வீழ்த்தி விம்பிள்டன் போட்டி ஒற்றையரில் 100-ஆவது வெற்றியை ஈட்டினாா். இதற்கு முன்பு நவரத்திலோவா 120, ரோஜா் பெடரா் 105 ஆட்டங்களில் வென்றுள்ளனா்.

ஜோகோவிச்

காலிறுதியில் அனஸ்டஸியா: மகளிா் ரவுண்ட் 16 சுற்றில் ரஷியாவின் அனஸ்டஸியா பவுல்யுசென்கோவ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் சோனே கா்தாலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அனஸ்டஸியா

நடப்பு சாம்பியன் வெளியேற்றம்: செக் குடியரசின் நடப்பு சாம்பியன் பாா்பரா கிரெஜ்சிகோவா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவிடம் தோற்று அதிா்ச்சியுடன் வெளியேறினாா்.

கிரெஜ்சிகோவா

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

கோவை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை டவுன்ஹால் வைஸ்யாள் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோவில் கும்... மேலும் பார்க்க

இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான செவ்வந்தி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடர் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த தொடரில் திவ்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மதியம் 2 மணி முதல் தரிசனம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.திருச்செந்... மேலும் பார்க்க

டிமான்ட்டி காலனி - 3 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

டிமான்ட்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க... மேலும் பார்க்க

எஸ்.ஜே. சூர்யா படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் கில்லர் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, அண்மை காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரு... மேலும் பார்க்க

காந்தாரா சேப்டர் - 1 ரிலீஸ் அப்டேட்!

காந்தாரா சேப்டர் - 1 வெளியீட்டுத் தேதியை போஸ்டர் வெளியிட்டுப் படக்குழுவினர் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்த... மேலும் பார்க்க