தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக...
காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்!
ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நம் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதை எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை துலக்குவது?
அதிலும் குறிப்பாக, இரவுக்கு உணவுக்குப் பின்பு பல் துலக்குவதுபோல, காலையில் சிற்றுண்டி எடுத்துக்கொண்ட பிறகு பல் துலக்கலாமா? சமீபமாக, சிலர் காலை உணவுக்கு முன்னால் பற்கள் சாஃப்ட்டாக இருக்கும். அதனால், நாங்கள் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்ட பிறகுதான் பல் தேய்ப்போம் என்கிறார்கள். இது சரியா? இதற்குப் பின்னால் என்ன அறிவியல் இருக்கிறது என்பதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் பிரபாகர் ஜோசப் அவர்களிடம் கேட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், 12 மணி நேரத்திற்கு ஒருமுறை பல் துலக்க வேண்டும் என்பதுதான். இரவு பல் துலக்குகிறார்கள் என்றால் படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்குங்கள் என்றே கூறுகிறோம். காலை பல் துலக்கும்போது அது காலை உணவுக்கு முன்போ அல்லது பின்போ, அவரவர்களுடைய விருப்பம்.
காலை உணவை முடித்துவிட்டு பல் துலக்குவதில் பெரிதாக தவறொன்றும் இல்லை. ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். 12 மணி நேரத்திற்குள் நம் பற்களில் பிளாக் (plaque) என்ற ஒன்று படியும்; அது பார்ப்பதற்கு நீர்போல், நம் பற்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கும். 12 மணி நேரத்திற்கு ஒருமுறை நாம் பல் துலக்கவில்லை எனும்போது, இது இன்னும் படிந்து கடினமாகும்.

காலை எழுந்தவுடன் பற்களின் மேல்பகுதியான எனாமல் சாஃப்ட்டாக இருப்பதினால், நாங்கள் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்குவது இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தவிர, காலை எழுந்தவுடன் பற்களின் எனாமல் சாஃப்ட்டாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. தூங்கி எழுந்தவுடன் நம் பற்களில் படிந்திருக்கும் பிளாக் தான் நமக்கு எனாமல் சாஃப்ட்டாக இருப்பதுபோன்று தோன்றுகிறது. இதை தவறாக புரிந்துகொண்டு எனாமல் தேய்ந்து போய்விடும் என்று நினைத்துகொண்டு, சிலர் காலையில் வாய்க்கொப்பளித்து சாப்பிட்டுவிட்டு, பிறகு பல் துலக்குகிறார்கள்.
ஆமாம். காலையில் சாப்பிட்டப் பிறகு பல் துலக்கினால், வாயில் அசிடிட்டி உருவாகும். அதன் விளைவாகத்தான் எனாமல் பாதிப்படையும். இதே, பல் துலக்கி விட்டு சாப்பிடும்போது அசிடிட்டி உருவாகாது. அதனால் காலை உணவிற்கு முன்பு பல் துலக்குவதே ஆகச் சிறந்தது. அது மட்டுமல்லாமல், காலையில் பல் துலக்குவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று இரவு தூங்குவதற்கு முன்பு பல் துலக்குவதும் முக்கியமே" என்கிறார் பல் மருத்துவர் பிரபாகர் ஜோசப்.