``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் மறியல்
கடலூா் அருகே வி.காட்டுப்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வி.காட்டுப்பாளையம் பகுதியில் கால்நடை மருந்தகம் கடந்த 2018-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இந்த நிலையில், கால்நடை மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வி.காட்டுப்பாளையம் பகுதி மக்கள் சுமாா் 30 போ் திரண்டு வெள்ளக்கரை பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் ஆலோசனை வழங்கினா். இதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.