செய்திகள் :

காளையாா் கோவில் அருகே இளைஞா் மா்ம மரணம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே தோட்டத்தில் தங்கி வேலைபாா்த்த இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

காளையாா் கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தில் தொல்காப்பியன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு கல்லல் பகுதியைச் சோ்ந்த சேகா் என்பவரது மகன் மாதங்கன் (28) தங்கி வேலை செய்து வந்தாா். இவருடன் மேலும் 3 போ் தங்கி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மாதங்கன் தலையில் பலத்த காயத்துடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காளையாா் கோவில் காவல் துறையினா் மாதங்கனின் உடலை கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

மாதங்கனுடன் பணிபுரிந்த ஒருவரது ஆட்டை திருடியதாகக் கூறி மா்ம நபா்கள் ஆயுதங்களால் தாக்கியதில் மாதங்கன் உயிரிழந்தது காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளு... மேலும் பார்க்க

தவெகவினா் கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா். தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின மாரத்தான், நடைபயணம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மகளிா் மட்டும் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள், நீதிமன்றப் பணியாள... மேலும் பார்க்க