செய்திகள் :

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

post image

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில், காவலர்களுக்கென தனியாக சங்கங்கள் இல்லாதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(ஏப். 21) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில், தமிழக காவல்துறை டிஜிபி விரிவான விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கும்போது, காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை?

காவலர்களுக்கு விடுமுறை தொடர்பான அரசாணையை காவல் துறை உயரதிகாரிகள் முறையாக பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது?’ ஆகிய கேள்விகளும் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விசாரணையில், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கங்கள் இருப்பதும் நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக் மற்றும் அவரது சகோதரா் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. போதைப் ப... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் 52 போ் பணி நியமனம்: ஆணை வழங்கினாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 உதவி மேலாளா் பணியிடங்க... மேலும் பார்க்க

சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘ஜகஜால கில்லாடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதற்காக, தனபாக்கியம... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்ற பிறப்பிக்கப்பட்டஉத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் மேல்முறையீடு: பெ.சண்முகம்

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

சென்னை: தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட இளைஞரை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவழைத்து பாராட்டினாா். சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழை... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

சென்னை: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தனா். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்த... மேலும் பார்க்க