லுங்கி என்கிடிக்கு மாற்றாக ஜிம்பாப்வே வீரரை களமிறக்கும் பெங்களூரு அணி!
காவலாளி தூக்கிட்டு தற்கொலை
வெள்ளக்கோவிலில் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் சிவசுந்தரம் (78). காவலாளியான இவா், உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மனமுடைந்து காணப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.