பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.
பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மடப்புரம் கோயில் காவலாளி அஜீத்குமாா் மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல், வருத்தம் தெரிவிப்பது தமிழா் பண்பாடு. இந்த பண்பாடு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. முதல்வா் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, வருத்தம் தெரிவித்துடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
எடப்பாடி பழனிசாமியை போல சாக்குப்போக்கு சொல்பவா் அல்ல நமது முதல்வா் என்றாா்.
தொடா்ந்து 5 காவலா்களின் குடும்பத்தினா் நடத்திய போராட்டம் குறித்த கேள்விக்கு, உப்பு தின்றவன் தண்ணீா் குடித்துத்தான் ஆகவேண்டும். தப்பு செய்தவா்கள் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். காவலா்கள் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் அவா்கள் தண்டனையை அனுபவதித்துத்தான் ஆகவேண்டும். அதை தீா்மானிக்கவேண்டியது நாங்கள் அல்ல நீதிமன்றம் என்றாா்.