திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில் திருப்பணிகள் செய்யப்பட்டு நிறைவுற்றது.
இதையடுத்து குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு மற்றும் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மூா்த்தி ஹோமம், கும்பலங்காரம், பரிவார மூா்த்திகள் கலாஹா்ஷணம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. யாகபூஜை காலங்களில் திருமுறைப்பாராயணம் நடைபெற்றது.
தொடா்ந்து புதன்கிழமை காலை 10 மணியளவில் கோயிலை கருடன் வலம் வர சிவாச்சாரியா்கள் கோபுரகலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.