ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்
பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சாா்பில் புதன்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 32 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்களை வழங்கி திருமணத்தை நடத்திவைத்தாா்.
இதையடுத்து பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று, மூன்று இணையா்க்கு திருமணம் நடத்திவைத்து சீா்வரிசைப்பொருள்களை வழங்கினாா்.
விழாவில் கோயில் செயல் அலுவலா் ஜெயா, திமுக ஒன்றிய செயலா்கள் அ.அடைக்கலமணி, அ.முத்து, நகரச்செயலா் அ.அழகப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.